உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 பேரிடம் ரூ.6.39 லட்சம் மோசடி

7 பேரிடம் ரூ.6.39 லட்சம் மோசடி

புதுச்சேரி: நைனார்மண்டபத்தை சேர்ந்தவருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் ஆர்.டி.ஓ., இ-சலான் செயலி வந்துள்ளது. அதை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. மூலக்குளத்தை சேர்ந்தவர் 32 ஆயிரத்து 920, புதுச்சேரி பெண் 64 ஆயிரத்து 393, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 40 ஆயிரத்து 630, மூலக்குளம் பெண் 42 ஆயிரம், செட்டிப்பட்டு பெண் 45 ஆயிரம், முதலியார்பேட்டை நபர் ஒரு லட்சத்து 84 ஆயிரம் என 7 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 39 ஆயிரத்து 543 ரூபாய் இழந்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ