மேலும் செய்திகள்
கத்தியுடன் சுற்றிய மூவர் கைது
02-Oct-2024
புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட கத்தியுடன் காத்திருந்த முகமூடி ஆசாமிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.கோரிமேடு கனரக வாகனம் நிறுத்தம், எரிவாயு குடோன் அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமூடி அணிந்து கத்தியுடன் பதுங்கிருந்த 7 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் வீதி பிரசாந்த், 28; குண்டுப்பாளையம் ராம் (எ) ராம்குமார்,26; அஜித்குமார்,28; விக்னேஷ் (எ) விக்கி,28; கோரிமேடு, காமராஜ் நகர் அஜய்குமார், 25; எல்லைபிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெரு புண்ணியமூர்த்தி (எ) அருண்குமார்,31; முத்தரையர்பாளையம் அவினாஷ்(எ) அபி, 20; என்பதும், வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது.அவர்கள் வைத்திருந்த 5 கத்திகள், ஒரு இரும்பு ராடு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, 7 பேரையும் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில், 6 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
02-Oct-2024