உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட 8 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல்

பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட 8 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அன்னியூரில் சர்க்கரை என பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட, 8 பள்ளி சிறுமிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி அன்னியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 4 ம் வகுப்பு படிக்கும் ஏழுமலை மகள் தனிஷ்கா, 9; கார்த்திக் மகள் ஷர்மிதா, 9; அய்யப்பன் என்பவரது மகள்கள் மதுமிதா, 9; பிரதிஷா,9; விஜயகுமார் மகள் நேத்ரா,9; சுரேஷ் மகள் கீர்த்திகா,9; நாகராஜ் மகள் சந்தியா,9; ஜெகன்நாதன் மகள் ரியாஸ்ரீ,9; ஆகிய 8 சிறுமிகளும், நேற்று மாலை பள்ளி வகுப்பில் இருக்கும் போது பச்சை கற்பூரத்தை (நாப்தலின் உருண்டை) இடித்து சர்க்கரை என நினைத்து சாப்பிட்டுள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு அனைவருக்கும் லேசான மயக்கம், வாந்தியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . இது பற்றி தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறி, டாக்டர்களின் உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ