8 பேரிடம் ரூ. 10.14 லட்சம் மோசடி
சைபர் கிரைம் கும்பலுக்கு வலை புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேரிடம் 10.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மொபைல் போனுக்கு, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வீட்டில் இருந்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என எஸ்.எம்.எஸ்., வந்தது. இதை உண்மை என நம்பிய கோவிந்தன் பல்வேறு தவணையாக 5.15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். குருமாம்பேட் ஜெனிபரிடம் 2 லட்சம், சண்முகாபுரம் சோமசுந்தரத்திடம் 1.48 லட்சம், ஏனாம் ஸ்ரீதேவி என்ற பெண்ணிடம் 1 லட்சம், அரியூர் சுதாகரிடம் கிரெடிட் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 23 ஆயிரம், ரங்கப்பிள்ளை வீதியைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் 15,500, காரைக்கால் நிதிஷ்குமார்ஜாவிடம் 7000, தட்டாஞ்சாவடி ஜனார்த்தனனிடம் 5000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேரிடம் 10.14 லட்சம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பல் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மேசாடி கும்பலை தேடி வருகின்றனர்.