மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
புதுச்சேரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, புதுச்சேரி சூக்கா ஷோரூமில் 800 கிலோ எடையில் பிரமாண்டமான 'கிங்காங்' சாக்லெட் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மிஷன் வீதியில், சூக்கா சாக்லெட் ஷோரூம் உள்ளது. இங்கு, கடந்த 2010ம் ஆண்டு முதல், புகழ் பெற்ற தலைவர்களின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அவர்களை சாக்லெட் சிலையாக வடிவமைத்து, அவ்வப்போது காட்சிப்படுத்தி வருகின்றனர்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், பாடகர் எஸ்.பி., பாலசுப்ரமணியம் ஆகியோரின் உருவங்களை சாக்லெட்டினால் வடிவமைத்து, காட்சிக்கு வைத்தது அனைவரையும் கவர்ந்தது.தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு முன்னிட்டு, 800 கிலோ எடைகொண்ட சாக்லெட்டில், 7.2 அடி உயரத்தில் பிரமாண்டமான கிங்காங்., சிலையை உருவாக்கி காட்சிக்கு வைத்துள்ளனர்.படைப்பு திறன் பிரிவு சாக்லெட் சிலை வடிவமைப்பாளர் ராஜேந்திரன் தங்கராசு கூறுகையில், 'இவ்வளவு பெரிய சிலை உருவாக்குவது சவாலாக இருந்தது. இரண்டு வாரம் கடுமையான உழைப்பினால் இதை உருவாக்கி உள்ளோம்' என்றார்.மேலாண் இயக்குநர் ஸ்ரீநாத் பாலச்சந்திரன் கூறுகையில், 'சாக்லெட் சிலைகளுடன் புகைப்படம் எடுப்பது புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமானது. குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்புவர். இந்தாண்டு கிங்காங் சாக்லெட் சிலையுடன் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
26-Nov-2024