உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காசு வைத்து சூதாட்டம் 9 பேர் கைது

 காசு வைத்து சூதாட்டம் 9 பேர் கைது

புதுச்சேரி: ஒதியன்சாலை போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூது ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு 1:05 மணியளவில் விரைந்தனர். அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி,39; வாணரப்பேட்டை சேர்ந்த அருள், 29; பிரகாஷ், 36; சத்தியமூர்த்தி, 44; அற்புதராஜ், 42; பாவாணர் நகர் தமிழ்மணி, 38; ஆட்டுப்பட்டி சேர்ந்த முருகன், 47; வம்பாகீரப்பாளையம் சேர்ந்த தர்மேந்திரன், 42; சுரேஷ், 37; ஆகியோர் என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்து, சீட்டுக்கட்டு, மற்றும் 22 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !