வழிபறி செய்ய திட்டம் வகுத்த 9 பேர் கைது: 4 கத்தி பறிமுதல்
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அருகே குருமாம்பேட் பகுதியில் மர்ம நபர்கள் கத்தியுடன் இருப்பதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.அந்த பகுதியில் உள்ள பழைய பட்டாசு ஆலை அருகில் தோப்பில் கும்பலாக இருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த அந்தோணி, 25, தர்மாபுரியை சேர்ந்த ஜான் (எ) ஜானகிராமன், 26, குமரேசன், 23, மணிகண்டன், 26, அரிவரசன், 24, வினோத், 25, குருமாம்பேட் பகுதியை சேர்ந்த விக்கி(எ) விக்னேஷ், 25, நந்தகுமார், 24, ஐயங்குட்டிபாளையத்தை சேர்ந்த பரணி, 22, என்பது தெரியவந்தது.மேலும் விசாரணை செய்ததில், பொதுமக்களிடம் வழிபறியில் ஈடுபட திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 4 கத்தி, 9 மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர். இவர்கள் மீது மேட்டுப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா, வழிபறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.