உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விதிமீறி பட்டாசு வெடித்த 63 பேர் மீது வழக்கு பதிவு

விதிமீறி பட்டாசு வெடித்த 63 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி,: புதுச்சேரியில் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாட்டை மீறி பொது இடத்தில் பட்டாசு வெடித்த 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காலை 6:00 மணி முதல் காலை 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், பள்ளிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.நேர கட்டுப்பாட்டை மீறி மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்படி, லாஸ்பேட்டையில் 9 பேர், அரியாங்குப்பம் 6, ரெட்டியார்பாளையம் 4, மேட்டுப்பாளையம் 3, காரைக்கால் டவுன் ஸ்டேஷனில் 5, கிருமாமம்பாக்கம் 3, திருநள்ளார் 3, கோட்டுச்சேரி 3 பேர் மீதும், கோரிமேடு, சேதராப்பட்டு, நெட்டபாக்கம், திருபுவனை, திருக்கனுார், வில்லியனுார், மங்கலம், முத்தியால்பேட்டை, தவளக்குப்பம், பாகூர், டி.ஆர்.பட்டினம், நிரவி ஆகிய போலீஸ் நிலையத்தில் தலா 2 பேர் வீதம் மொத்தம் 63 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !