உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இடிந்து விழும் மதில்… பெயர்ந்து சிதறும் கண்ணாடி…

 இடிந்து விழும் மதில்… பெயர்ந்து சிதறும் கண்ணாடி…

புதுச்சேரி: மகளிர் மேம்பாட்டு துறையில் அடிக்கடி விழும் மதில் சுவர்கள், கண்ணாடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரியின் இதயப்பகுதியாக உள்ள சாரத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைந்துள்ளது. நாள் தோறும் முதியோர்கள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பென்ஷன் உதவிக்காக இந்த அலுவலகத்தை நாடுகின்றனர்.அப்படி வருவோரை சமீபகாலமாக மரண பயத்தில் நடுங்க வைத்து வரவேற்கிறது துறையின் கட்டடம். துறையின் உள்ளே செல்லும்போதே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எச்சரிக்கை மணி எழுப்புகின்றனர் பொதுமக்கள்...துறைக்கு உள்ளேயா போக போகறீங்க., அப்படினாமேலே பார்த்தப்படியே போங்க என்று கடுமையாக எச்சரிக்கின்றனர். அந்த அளவிற்குஅந்த கட்டடத்தின் மேல் பகுதியிலுள்ள கண்ணாடிச் சாளரங்கள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. அப்படியே உள்ளே செல்லும் ஒவ்வொரு அடியிலும், தலையின் மீது சிமென்ட் காரைகள் விழுகிறது. இதனால் துறையின் பணியாளர்களும், முதியோரும் அச்சத்துடன் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க விரிசல் விழுந்து மிரட்டிக்கொண்டு இருந்த துறையின் பின்பக்க முழு மதில்சுவர் இப்போது தாறு மாறாக இடிந்து விழுந்துள்ளது. அதனுடன் இணைந்திருந்த வாகன ஷெட் நொறுங்கி சிதறிக் கிடக்கிறது. அப்பகுதி முழுதும் குப்பை குவியல் போல் காட்சியளிக்கிறது. நுழைவு வாயில் அருகிலுள்ள மற்றொரு மதிலும் எப்போது விழும் என்ற நிலையில் அச்சுறுத்தி இருக்கிறது. இந்த கட்டடம் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமானது. முன்பு இங்கு சுகாதாரத் துறை, கருவூலத் துறை போன்றவை இயங்கி வந்தன. அவை தங்களுக்கான புதிய கட்டடங்களை அமைத்து பாதுகாப்பாக குடிபுகுந்துவிட்டன. ஆனால சித்தன்குடியில் இருந்து இடம் மாறிய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மட்டும் இந்த பாழடைந்த சிதிலக் கட்டடத்தில் சிக்கிக் கொண்டு திணறுகிறது.புதுச்சேரியின் பெண்கள், குழந்தைகள், முதியோர் நலத் திட்டங்களை நிறைவேற்றும் இந்த துறையின் கட்டடத்தில் உயிர் பாதுகாப்பே முதலில் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்குபோர்க்கால அடிப்படையில் மகளிர் மேம்பாட்டுத் துறையை வேறு இடத்திற்கு மாற்றவும், துறைக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை