உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய்மை பாரதம் தலைப்பில் கல்லுாரியில் நிதிசார் கல்வி நிகழ்ச்சி

துாய்மை பாரதம் தலைப்பில் கல்லுாரியில் நிதிசார் கல்வி நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுவை பாரதியார் கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கிகள் சார்பில், துாய்மையான பாரதம் என்ற தலைப்பில், நிதிசார் கல்வி நிகழ்ச்சி நடந்தது. வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லுாரியில் நடந்த, நிகழ்ச்சிக்கு முதல்வர் பாபு தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பேராசிரியர் தண்டபாணி வரவேற்றார். துாய்மையான பாரதம் என்ற இலக்கினை அடைய மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்தப்பட்டது. துாய்மை பணியார்கள் கவுரவிக்கப்பட்டனர். வினாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, வங்கிகளில் டிஜிட்டல் சேவைகளை பெறும் முறைகள், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன. மேலும், கிராமிய கலைஞர்கள் நாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேராசிரியர் சீனு, வங்கி அதிகாரிகள் ஜெயராஜ், அருள் பிரசாத், விஜய் ஜெயந்தி நாதன், பிரபாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் அனுராதா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.உதவிப் பேராசிரியர் ராதிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை