உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியை சேர்ந்தவர் அணி மேலாளராக நியமனம்

புதுச்சேரியை சேர்ந்தவர் அணி மேலாளராக நியமனம்

புதுச்சேரி : சீனாவில் நடைபெறும் டிராகன் போட் உலக கோப்பை போட்டிக்கு அணி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயபாலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா வாழ்த்து தெரிவித்தார்.2025ம் ஆண்டுக்கான டிராகன் போட் உலக கோப்பை போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.இதில் இந்திய அணிக்கான மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தி.மு.க., மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பொதுக்குழு உறுப்பினர் வேலன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி