உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலிதீர்த்தாள்குப்பம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் கேலரி தேவை

கலிதீர்த்தாள்குப்பம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் கேலரி தேவை

திருபுவனை : மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிராமப்புற மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பார்வையாளர் கேளரி அமைக்கவேண்டும். கலிதீர்த்தாள்குப்பம், கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.பள்ளியில் இயற்கையான சூழலில் 10 ஏக்கர் பரப்பளவில் விசாலமான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் காலை, மாலையில் விளையாட்டு, நடை மற்றும் ஓட்டப் பயிற்சி பெற்று வருகின்றனர். விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பல லட்சம் ரூபாய் செலவில் சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.திருபுவனை, நெட்டப்பாக்கம் மற்றும் மண்ணாடிப்பட்டு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இப்பள்ளி விளையாட்டு மைதானம் மையப்பகுதியாக உள்ளது.கிராமப்புற பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் கேளரி அமைக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி