உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி : புதுச்சேரி கனகன் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தார். விசாரணையில், முத்தரையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன், 21; என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி