மேலும் செய்திகள்
கத்தியுடன் திரிந்த ரவுடி கைது
28-Oct-2024
புதுச்சேரி : வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலையில் கத்தியுடன் திரியும் மர்ம நபர் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில், முதலியார்பட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், வேல்ராம்பட்டு துலுக்காணத்தம்மன் நகர், 8 வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கல்வி (எ) கலைச்செல்வன், 32; என்பதும், கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. கலைச்செல்வனை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
28-Oct-2024