பாரதிதாசன் கல்லுாரியில் மூன்று நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி, : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ் துறையின் சிந்தனை களம் அமைப்பு, கல்லுாரியின் சட்ட ஆலோசனை மையம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான உளவியல் வழிகாட்டல், சட்ட ஆலோசனை என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்க துவக்க விழா நடந்தது. துணை பேராசிரியர் ராஜலட்சுமி துணை பேராசிரியர் சந்திரா வரவேற்றனர். சட்ட ஆலோசனை மைய அலுவலர் சாந்தி, மைய அறிக்கையை வாசித்தார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் சேதுபதி நோக்கவுரையாற்றினார். பேராசிரியர் பட்டம்மாள் மாணவிகள் எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்களுக்கு விளக்கம் அளித்தார். வக்கீல் விருந்தா மோகன், வளர் இளம் பருவத்தினர் எதிர்நோக்கும் பிரச்னைகள், பெண்களுக்கான எதிரான குற்றங்கள் குறித்த சந்தேகங்களுக்கு கலந்துரையாடலில் விளக்கம் அளித்தார்.மூன்றாம் ஆண்டு தமிழ் துறை மாணவி அஸ்வதி நன்றி கூறினார்.