பல் வலிக்கு சிகிச்சை எடுத்த வாலிபர் சாவு
புதுச்சேரி: பல் வலிக்கு சிகிச்சை எடுத்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் 31, திருமணம் ஆகாதவர். கடந்த சில மாதங்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 20ம் தேதி திடீரென அரவிந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடன் அவரது உறவினர்கள் மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.