உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் பாதித்தவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு

விபத்தில் பாதித்தவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு

புதுச்சேரி: விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு தொகை 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர், இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் மூலம், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம், 396 ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்தார்.அவர் வேலை செய்யும் போது, கை பாதிக்கப்பட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு விபத்து காப்பீடு தொகையாக 60 ஆயிரம் ரூபாய் அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.இத்தகவலை, புதுச்சேரி கோட்ட துணை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை