உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து அபாயம்

 மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து அபாயம்

புதுச்சேரி: கோரிமேடு - மேட்டுப்பாளையம் சாலையில் மெகா பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கோரிமேடு - மேட்டுப்பாளையம் சாலை, பிரியதர்ஷினி நகர் அருகில் ரோடு குண்டும் குழியுமாகவும், சில இடங்களில் மெகா பள்ளங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை வழியாக ஜிப்மருக்கு செல்பவர்களும், ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் குடியிருப்புகள், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இருப்பதால் முக்கியமான சாலையாக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் கனரக வாகன ஊர்தி முனையம் உள்ள நிலையில், லாரிகள் இந்த சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !