| ADDED : டிச 12, 2025 05:46 AM
புதுச்சேரி: ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். புதுச்சேரி, பல்கலைகழகம் 2018-21, 2019-22, 2020-23 மற்றும் 2021-24 கல்வி ஆண்டிற்கான தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 2 018-21ம் கல்வியாண்டு மாணவிகள் சவுந்தர்யா, அபிராமி, 2019-22ம் கல்வி ஆண்டில் மாணவிகள் ஹரிணி, வேதவள்ளி, சாமிஷா மற்றும் மாணவர்கள் அஷ்வின் பாலாஜி, வாஞ்சிநாதன், 2020-23ம் கல்வியாண்டில் மாணவிகள் சக்தி, ஜெயவர்ஷா, சுருதிலயா மற்றும் மாணவர்கள் அரவிந்த், விக்னேஷ், 2021-24ம் கல்வி ஆண்டில் மாணவி திவ்யா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். இவற்றில் பொதுத் தமிழ்ப் பிரிவில் இரு மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள், உறுதுணையாக பணியாற்றிய துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை ஆச்சார்யா கல்விக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் அரவிந்தன், கல்லுாரியின் முதல்வர் உஷாதேவி பாராட்டினர்.