உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் மக்கள் மன்றத்தில் 24 புகார்களுக்கு நடவடிக்கை

போலீஸ் மக்கள் மன்றத்தில் 24 புகார்களுக்கு நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., திவ்யா பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி., ஷாலினி சிங் அறிவுறுத்தலின்படி, மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  அதன்படி, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., திவ்யா பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.  இதேபோல், காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஸ்ருதி, பயிற்சி ஐ.பி.எஸ்., அனுராக் சோப்ரா, தன்வந்திரி நகரில் வம்சிதர ரெட்டி, மங்கலத்தில் எஸ்.பி., சுப்ரமணியன், கிருமாம்பாக்கத்தில் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.  இதில், பொது மக்களிடம் இருந்து ,46 புகார்கள் பெறப்பட்டு, 24 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ