மேலும் செய்திகள்
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
1 minutes ago
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்
2 minutes ago
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
5 minutes ago
மனதின் குரல் இன்று ஒலிபரப்பு
5 minutes ago
வில்லியனுார்: பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் 'செயல்திட்ட செயல்பாடுகள்' நிகழ்ச்சி நடந்தது. வில்லியனுார் அருகே உள்ள ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் செயல்திட்ட செயல்பாடுகள் என்ற நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி நிர்வாகி சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போலீஸ் மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ர மணியன், பி.ஈ.சி.எப்., அதிகாரிகள் விஷ்ணுவர்தன், ராஜ்குமார் மற்றும் உதயகுமார், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக பேராசிரியர்கள் வினோத் மற்றும் ஜன்ஸ்டின் ஆகியோர் பங்கேற்று செயல்திட்ட செயல்பாடுகள் அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் செயல்திட்ட செயல்பாடு அரங்கை பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பார்வையிட்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்தனர்.
1 minutes ago
2 minutes ago
5 minutes ago
5 minutes ago