உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ம.க., கொடி பயன்படுத்தினால் நடவடிக்கை

 பா.ம.க., கொடி பயன்படுத்தினால் நடவடிக்கை

புதுச்சேரி: பா.ம.க., கட்சி கொடி கலரை பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில அமைப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநில பா.ம.க., அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை; சென்னையில், கடந்த 1989ம் ஆண்டு, பா.ம.க., கட்சியை, அதன் நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார். அப்போது, நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில், கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடி, தேர்தல் துறையால் அங்கீகரிக்கப் பட்டது. சமீபத்தில், புதுச்சேரியில் உதயமான ஜே.சி.எம். மன்றம் என்ற பெயரில் செயல்படும் அமைப்பில், பா.ம.க, கொடி கலரை பயன்படுத்துகின்றனர். அதே கலரில், சுவர்களில் எழுதி வருகின்றனர். அதை பா.ம.க., வன்மையாக கண்டிக்கிறது. எங்கள் கொடி கலரை இனி பயன்படுத்துபவர்கள் மீது கட்சி நிறுவனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ