மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
04-Oct-2026
புதுச்சேரி: திருக்கனுார், லிங்காரெட்டிப்பாளையத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் புளியந்தோப்பு அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்டு வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரம், கன்னிகாபுரத்தை சேர்ந்த மணிரத்தினம், 27, என்பவரை கைது செய்தனர். இதேபோல், மணலிப்பட்டு, மேம்பாலம் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விழுப்பும், மேல்மயிலத்தை சேர்ந்த விஜய், 31; என்பவரை திருக்கனுார் போலீசாரும், கே.ஆர்.பாளையம் கடை வீதியில், குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விழுப்புரம், வழுதாவூரைச் சேர்ந்த சசிகுமார், 30; என்பரை காட்டேரிக்குப்பம் போலீசாரும் கைது செய்தனர்.
04-Oct-2026