உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தலைமை தேர்தல் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

 தலைமை தேர்தல் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரியின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ்க்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே வகித்து வரும் தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்புடன், கூடுதல் பொறுப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கவர்னர் கைலாஷ்நாதன் ஆணைப்படி, தலைமைச் செயலாளர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார். இந்த நியமனத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை