ஆடிப்பூர பெருவிழா
புதுச்சேரி: திலாசுப்பேட்டை முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூரப் பெருவிழாவை யொட்டி இன்று காலை 7:00 மணியளவில், வலம்புரி முத்து விநாயகர் கோவி லில் இருந்து, மாட வீதி வழியாக பால்குடங்கள் எடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, 9:00 மணியளவில், அம்மனுக்கு 108 பால்குட மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், அறநிலையத்துறை ஆனையர் சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.