உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிறந்த நாளுக்கு பேனர் வைக்க கூடாது அ.தி.மு.க., அன்பழகன் அறிவுறுத்தல்

பிறந்த நாளுக்கு பேனர் வைக்க கூடாது அ.தி.மு.க., அன்பழகன் அறிவுறுத்தல்

புதுச்சேரி : அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கூறியதாவது;புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரே படுக்கையில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், நோயாளிகளை ஒரே இடத்தில் படுக்க வைப்பது அரசின் அவல நிலையை காட்டுகிறது. கவர்னர் தங்குவதற்கு கடற்கரையோரம் புதிதாக பல கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்ட அரசு முடிவு எடுத்துள்ளது. கவர்னருக்கு பொதுமக்கள் மீது அக்கறை இருந்தால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதியை செய்து கொடுத்துவிட்டு, அதன் பிறகு தான் தங்குவதற்கு கட்டடத்தை சீர்படுத்தலாம் என, அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.வரும் 10ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் பேனர், கட்- அவுட்டுகள் வைக்க வேண்டாம். மீறி வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என் நலனுக்கு எதிரானவர்கள். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை