உள்ளூர் செய்திகள்

வாலிபர்  தற்கொலை

பாகூர் : வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 24. இவரது மனைவி தேவி, 20. வினோத் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், தேவி கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன், தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வினோத்திற்கு அவரது பாட்டி குமாரி, சாப்பாடு சமைத்து கொடுத்து வந்தார்.குமாரி நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வினோத் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ