உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘முதியோர் வயது வரம்பினை 50ஆக குறைக்க வேண்டும்’

‘முதியோர் வயது வரம்பினை 50ஆக குறைக்க வேண்டும்’

காங்.,கார்த்திகேயன் படம்  புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கையில் காங்., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பேசியதாவது: சேதாரப்பட்டில் தற்போது ஜிப்மர் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் இருபுறமும் ஏரி மற்றும் நீர்நிலைகள் உள்ளதால், கட்டுமானப் பாதுகாப்பு கருதி அதை எகனாமிக்ஸ் சோன்  பகுதிக்கு மாற்ற வேண்டும். பிள்ளையார்குப்பம் - கூடப்பாக்கம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட வேண்டும். குருமாப்பேட்டை குப்பைக் கிடங்கால் பரவும் துர்நாற்றம் மற்றும் நோய்த்தொற்று அபாயத்தைத் தவிர்க்க, அதை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அந்தந்த நகராட்சி, பகுதிகளின் குப்பைகளை அங்கேயே கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கப் புதிய மற்றும் பழைய தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்க வேண்டும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை