வேளாண் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
வில்லியனுார், ; வில்லியனுார் திருக்காமீஸ்வரர் வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலை வகித்தார். சங்க நிறுவன தலைவர் குலசேரகன் வரவேற்றார். பொருளாளர் விஜயகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகிர் உசேன், இயக்குனர் வேலுமணி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன், இந்தியன் வங்கி மேலாளர் சதீஷ்குமார், வேளாண் துணை இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். என்.ஏ.எப்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், தலைமை நிர்வாக அதிகாரி தேவி, கணக்காளர் மீனாட்சி பங்கேற்றனர்.சிறந்த வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவன பங்குதாரர்களுக்கு பங்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கலம் கிளை செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.