உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாய தொழில்நுட்ப மேம்பாடு வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி

விவசாய தொழில்நுட்ப மேம்பாடு வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி

புதுச்சேரி: வைத்திலிங்கம் எம்.பி., பார்லிமென்டில், நேற்று விவசாயத்தில், தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல், பண்ணை நடைமுறைகளில் நவீன திறன்களை பயன்படுத்துதல், பொருட்களை சந்தைப்படுத்தல், புதுமைகளை கடைப்பிடித்தல், உரம் மற்றும் நீர் பயன்பாட்டின் விரயத்தை குறைத்தல் ஆகியவற்றில் அரசு மேற்கொண்ட முன் முயற்சிகள் இல்லையெனில் அதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் பகீரத் சவுத்ரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது: விவசாய உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களைத் துவங்கி உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கடந்த,10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 900 பயிர் வகைகளை உருவாக்கி உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி கிருஷி விக்யான் கேந்திராக்கள் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம், சிறு, குறு விவசாயிகளிடம் பயிற்சிகள், கள அளவிலான செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விவசாய பொருட்களை சந்தைப்படுத்த இ-நாம், கிசான் ரயில் மற்றும் கிசான் உடான் போன்றவைகளை அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மண் பரிசோதனை அடிப்படையிலான சமச்சீர் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை ஐ.சி.ஏ.ஆர்., பரிந்துரைக்கிறது.பாசன நீரை சேமிக்க பல்வேறு பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் உட்பட நீர்ப்பாசன நுட்பங்கள் மூலம் தண்ணீரை குறைந்து பயன்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைக்கிறது. மண் ஆரோக்கிய அட்டை திட்டம், மண்ணுக்கு ஏற்ற உரங்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்து, விரயத்தைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை