உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாய நல சங்க பொதுக் குழு கூட்டம்

விவசாய நல சங்க பொதுக் குழு கூட்டம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட நெடுங்காடு விவசாய நல சங்கத்தின் பொதுக்குழுகூட்டம் நேற்று முன்தினம் சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டு சங்க செயல்பாடுகளை குறித்து விரிவாக பேசப்பட்டது. விவசாயிகளுக்கு புயல் நிவாரணமாக ெஹக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய முதல்வர், வேளாண்மை அமைச்சர் , வேளாண்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் ஆனந்த் தலைவராகவும்,நடராஜன் செயலாளராகவும், ரகுநாதன் பொருளாளராகவும், சங்க நிர்வாக ஆலோசனை குழு உறுப்பினராக பெத்த பெருமாள்,ஆனந்தராஜ்,சட்ட ஆலோசராக வழக்கறிஞர் இயேசுராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முடிவில் குமணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை