உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியிய ல் கல்லுாரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில், ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கம் நடந்தது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் மஞ்சுபாலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செ ன்னை டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஐ.டி., ஆய்வாளர் அசோக்குமார் கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ., ) ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து பேசினார். கல் லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், டிரஸ்டி சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், டீன் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை பேராசிரியர்கள் அகுணாகுமாரி, ஷாலினி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை