உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேம்பாலம் கட்டும் பணியில் அரசு துறை அலட்சியம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

மேம்பாலம் கட்டும் பணியில் அரசு துறை அலட்சியம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில்,ரூ. 27 கோடியில் துவக்கப்பட்ட மேம்பால பணி, ரூ. 95 கோடியில் முடிவு பெற உள்ளதாகஅ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டி உள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரி நகரப்பகுதியில் பிரதான கழிவு நீர் வாய்க்கால் மீது புறவழிக்கான பாலம் அமைக்க ரூ.27 கோடி செலவில் கடந்த 2016ல், பூமி பூஜை போடப்பட்டது.கடந்த17 ஆண்டுகளுக்கு முன், 27 கோடி ரூபாய் அளவில் துவக்கப்பட்ட பணி தற்போது 95 கோடியில் முடிவு பெற உள்ளது.அரசு துறையின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை, போதிய நிதி ஒதுக்காமை, நிதி துறையின் அனுமதி பெறாதது, மாறி வரும் ஆட்சியாளர்களின் மனநிலை ஆகியவற்றிற்கு தகுந்தார் போல்,65 கோடிஇப்பணிக்குஅதிகம் ஆகி உள்ளது.இந்தகட்டுமான பணியில் செலவாகி உள்ள மக்கள் வரிப்பணம்65 கோடி கூடுதல் செலவை யார் ஏற்பது. மேம்பாலம் கட்டுமான பணியை தாமதப்படுத்தாமல் உடனடியாக துவக்க வலியுறுத்தி அ.தி.மு.க.,சார்பில், உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் அருகில் இன்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.புதுச்சேரியில்இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக வரும் முதல் தேதியில் இருந்துஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், அவ்வாறு அணியாவிட்டால், ஆயிரம்அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபுதுச்சேரி மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனம் தன்னிடம் உள்ள ஹெல்மெட்களை உடனடியாக விற்பனை செய்ய, உதவக்கூடிய அறிவிப்பாக உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை