உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெஸ்டோ பார்களுக்கு எதிராக போராட்டம் அ.தி.மு.க., அன்பழகன் அறிவிப்பு

ரெஸ்டோ பார்களுக்கு எதிராக போராட்டம் அ.தி.மு.க., அன்பழகன் அறிவிப்பு

புதுச்சேரி : ரெஸ்டோ பார்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி; புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தசிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், ரெஸ்டோ பாரில்,கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.புதுச்சேரியில் ரெஸ்டோ பர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் ரெஸ்டோ பார்கள் இயங்கிவருகிறது. கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய இளைஞரை மருத்துவமனை செல்ல விடாமல், கார் சாவியை காவலர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டதால்,அந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். ரெஸ்ட்டோ பார்களில்பணி புரியும் நபர்களின்,குற்றப் பின்னணி குறித்து போலீசார் கண்காணிக்க தவறிவிட்டனர். பார்களில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது. டெஸ்ட்ரோபாரில் நடந்த கொலைக்காக பெரியகடை போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா குறித்து தவறாக விமர்சனம் செய்திருப்பதுவன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் மற்றும்சட்ட விரோத செயல்களை கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ