அ.தி.மு.க., நிர்வாகி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி:அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, மீன் வியாபாரம் செய்யும் மகளிர்களுக்கு அன்னக்கூடை வழங்கினார்.அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் பிறந்த நாளை முன்னிட்டு மீன் வியாபாரம் செய்யும் மகளிர்களுக்கு அன்னக்கூடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கி, மீனவ வியாபார மகளிர்கள் 350க்கும் மேற்பட்டோருக்கு அன்னக்கூடை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் ராஜா செய்திருந்தார். இதில், மாநில மீனவர் அணி இணை செயலாளர் ராஜவேலு, தொகுதி அவை தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர் பன்னீர்செல்வம், ஜெ., பேரவை துணை செயலாளர் ஜீவா, வார்டு நிர்வாகிகள் நாகப்பன், மணி, மஞ்சினி, சிவகுமார், பாலு, ரங்கநாதன், பழனி, பரத், சிம்பு உட்பட பலர் பங்கேற்றனர்.