உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., 78வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி னார். மாநில அவைத்தலை வர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத் தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜெ., பிறந்த நாள் அன்று தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்க வேண்டும். பொது மக்களுக்கு தள்ளு வண்டி, தையல் மிஷன், கிரைண்டர், குக்கர், மிக்ஸி, மின்சார அடுப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கவது. அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள குடு ம்ப தலைவிகளின் வீட்டிற்கு சிறப்பு நிதியுதவியாக ரூ. 10 ஆயிரம் தேர்தலுக்கு முன்பாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உடனடியாக அமைச்சரவையை கூட்டி முத ல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பணிபுரிந்து இறந்த ஊழியர்களில் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணியை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை