உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக்கில் விண்ணப்பிக்க அ.தி.மு.க., இலவச உதவி மையம்

சென்டாக்கில் விண்ணப்பிக்க அ.தி.மு.க., இலவச உதவி மையம்

புதுச்சேரி : சென்டாக்கில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அரியாங்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் இலவச மையம் திறக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அ.தி.மு.க., பொருளாளர் ரவி பாண்டுரங்கன் அரியாங்குப்பம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அரியாங்குப்பம் தொகுதியில் பிளஸ் 2 முடித்து சென்டாக்கில் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ முடிவெடுத்து அரியாங்குப்பத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் இலவச விண்ணப்ப உதவி மையத்தை திறந்துள்ளார்.இங்கு சென்டாக் விண்ணப்பங்களைச் செலுத்தி சொந்த செலவில் பதிவேற்றம் செய்து கொடுத்து வருகிறார். கடந்த 17ம் தேதி திறக்கப்பட்ட இந்த அலுவலகத்தில் மாணவர்கள் பலர் சென்டாக் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். விண்ணப்ப கட்டணமான 1,000 ரூபாயை மாணவர்களிடம் இருந்து வாங்காமல் தனது சொந்த செலவில் செலுத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி