உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கன்வாடிகளுக்கு கட்டடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்

அங்கன்வாடிகளுக்கு கட்டடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுச்சேரி : தனியார் இடத்தில் இயங்கும் அங்கன்வாடிகளுக்கு புதிதாக கட்டடம் கட்டி தர வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தட்டாஞ்சவடி தொகுதி அ.தி.மு.க, செயலாளர் கமல்தாஸ், மாநில துணைச் செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனாவிடம் அளித்த மனு: . தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் இடப் பற்றாக்குறையால், மழலையர்கள் ஆரம்ப கல்வி பயில முடியாத நிலை உள்ளது. ஆதலால், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடிகளுக்கு அரசு இடங்களில் சொந்த கட்டடம் கட்டி தர வேண்டும். . மேலும், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி பகுதிகளில் வாடகைக்கு இயங்கி வரும் அங்கன்வாடிகளை, உழவர்கரை நகராட்சியால் கட்டி திறக்கப்படாமல் உள்ள சமுதாயக் கூடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ