உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பந்த்தை முறியடிக்க வேண்டும் அரசுக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்

பந்த்தை முறியடிக்க வேண்டும் அரசுக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை (9ம் தேதி) 'பந்த்' அறிவித்துள்ள இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் நாளை (9ம் தேதி) நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பின்றி பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. ஆனால், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி கட்சிகள் இதற்கு நேர்மாறாக மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் விதமாக 'பந்த்' அறிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர்.எனவே 'பந்த்' போராட்டம் அறிவித்துள்ள கட்சி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, 'பந்த்' போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும். புதுச்சேரியில் பந்த் அறிவித்துள்ள இண்டியா கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் மேற்கூறிய பிரச்னைகளுக்கு போராட முன் வருவார்களா? காங்.,-தி.மு.க., கூட்டணி கட்சிகளின் இந்த 'பந்த்' தொழிலாளர்கள் நலனுக்கானது அல்ல. அரசியலுக்கான நாடகமாகும். இந்த 'பந்த்'தை முறியடித்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி