எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை அன்பழகி தலைமை தாங்கினார். திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆலோசகர் வெற்றிவேல், சுகாதார உதவியாளர்கள் பிரகாஷ், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிருமிக்கும், நோய்க்கும் உள்ள வேறுபாடு, பரவும் விதம், பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். தமிழாசிரியை பெரியநாயகி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் பச்சையப்பன் செய்திருந்தார். ஆசிரியை சுகண்யா நன்றி கூறினார்.