உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., ஆர்ப்பாட்டம் 

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி : ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவத் தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும், கட்டுமான வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அமைப்பு சாரா நல வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கிட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, வாரியம் முழு செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பாசிக் ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த, 38 கோடி ரூபாயை, சம்ளமாக வழங்க வேண்டும். பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி