உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபானம் கடத்திய வாலிபர் கைது

மதுபானம் கடத்திய வாலிபர் கைது

புதுச்சேரி: காராமணிக்குப்பத்தில் மதுபானம் கடத்தியவரை காலல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு, காலால்துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான கலால் பிரிவு அதிரடிப்படை குழுவினர் நேற்று இரவு 7:00 மணியளவில் காராமணிக்குப்பம், பாயிண்ட் கேர் வீதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மதுபானங்களை கடத்திச் சென்ற நபரை அதிரடிப்படையினர் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து ரூ. 10,512 மதிப்பிலான 18 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த், 32, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை