உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மது போதையில் தகராறு: வாலிபர்கள் கைது

மது போதையில் தகராறு: வாலிபர்கள் கைது

காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று (நவ.,4) மதுபோதையில் ஆபாசமான பேசிய நபரை ரோந்து சென்ற நகர காவலர் விவேக் பிடித்து விசாரித்தார். இதில் அவர் காரைக்கால் டி.என்.ஆர்.,சாலையைச் சேர்ந்த தாஜுதீன், 42; என தெரியவந்தது. இவர் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் காரைக்கால் திருநள்ளாறு சாலை சந்தை திடல் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட காரைக்கால் டி.என்.ஆர்.சாலையைச் சேர்ந்த முகமது யூசுப், 46 ;என்பதும், காவலர் விவேக் பிடித்து அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி