உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு

புதுச்சேரி : புதுச்சேரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், 16வது மாநாடு நடந்தது. புதுச்சேரி மாதா கோவில் வீதியில் உள்ள நினைவரங்கத்தில் நடந்த மாநாட்டை, அகில இந்திய துணை தலைவர் சுதா சுந்தர்ராமன் துவக்கி வைத்து, பேசினார்.மாநிலச் செயலாளர் இளவரசி மாநாட்டு வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் மாரிமுத்து வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். அகில இந்திய துணை செயலாளர் சுகந்தி, சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் பிரபுராஜ், சங்கங்களின் தலைவர்கள் மலர்விழி, விஜயா, சங்க நிர்வாகிகள் சத்தியா, உமா சாந்தி, ஜானகி, முனியம்மாள், அன்பரசு, அன்பரசி ஜூலியட், லலிதாம்பிகை உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், புச்சேரியில் பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை தடுக்க வேண்டும். ரெஸ்ட்ரோ பார்களை தடை செய்ய வேண்டும். புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ