உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு: செல்வம் பங்கேற்பு

அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு: செல்வம் பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியின் மேம்பாலத் திட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை நடத்தினார். டெல்லி சட்டசபை சார் பாக அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு இரு நாட்கள் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் 29 மாநில சபாநாயகர்கள் மற்றும் ஆறு மாநிலங்களில் உள்ள சட்ட மேலவைகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். விட்டல்பாய் படேலின் வாழ்க்கை, பார்லிமெண்ட் பங்களிப்பு மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சி, சிறப்பு ஆவணப்படம் மற்றும் நினைவு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த சபாநாயகர்கள் மாநாட்டில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டசபை செயலர் தயாளன் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா அளித்த இரவு விருந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத் துறை அமைச்சக அதிகாரிகளை சபாநாயகர் செல்வம் சந்தித்தார். ராஜிவ் சிக்னல் முதல் இந்திரா சிக்னல் வரை மேம்பால திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !