மேலும் செய்திகள்
தீபாவளி போனஸ் வழங்க பணியாளர்கள் கோரிக்கை
04-Oct-2024
புதுச்சேரி: பாண்டெக்ஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, நிலு வையில் உள்ள சம்பள தொகையுடன் கூடிய போனஸ் வழங்க வேண்டும்.இதுகுறித்து, பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஆசைத்தம்பி அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை:புதுச்சேரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் பணி செய்து வரும், தொழிலாளர்களக்கு 57 மாதங்கள் சம்பளம் பாக்கி நிலுவையில் உள்ளது. மேலும், 84 மாதங்கள் தொழிலாளர் வைப்பு நிதி, பணிக்கொடை நிதி ஆகிவை பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.மாதம் சம்பளம் வழங்காமல், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, நிலுவையில் உள்ள தொகையில் இருந்து 5 மாத சம்பள மற்றும் தீபாவளி பண்டிகை போனஸ் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
04-Oct-2024