ஜீவானந்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புதுச்சேரி: காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகஜோதி, பொருளாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், இந்த பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 20 முன்னாள் ஆசி ரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட் டது. முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் 2025ம் ஆண்டின் மாத காலண்டர் வழங்கப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவர் சேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மறைந்த ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.