மேலும் செய்திகள்
50 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
20-Jul-2025
காரைக்கால்: காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 1975 முதல் 1978 வரை இளங்கலை பட்டம் படித்த முன்னாள் மாணவர்கள் 50ம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர் கலியமூர்த்தி வரவேற்றார். முன்னாள் பேராசிரியர்கள் லியாகத்அலி, சிவராமகிருஷ்ணன், சம்பந்தம், முத்துக்குமரசாமி, ஜெயச்சந்திரன், ஜெயராமன் மற்றும் காரை சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மலரும் நினைவுகளை பகிர்த்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அபுக்கர், அருமைநாதன், பசுபதிராஜன், சமரசம், பரணி, அமலி, ராமமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு இக்பால், புவனேஸ்வரி, ஷேக் முகமது ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும் பலர் காணொலி காட்சி மூலம் தங்கள் நினைவுகளை பகிர்த்துகொண்டனர்.
20-Jul-2025