உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிக்னலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

சிக்னலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.புதுச்சேரி நகரப் பகுதிகளில் மாலை நேரங்களில் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று இரவு ராஜிவ் சிக்னல் பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சாலையின், 5 புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில், இ.சி.ஆர்., வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சிக்னல் பகுதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் மத்திய சிக்கி வெளியே செல்ல முடியாமல் தவித்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ