மேலும் செய்திகள்
காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா
09-Jul-2025
காரைக்கால்,: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.காரைக்கால் அம்மையார் மாங்கனி விழா நேற்று நடந்தது. தொடர்ந்து வீதி உலா வரும் பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்சென்று அழைத்து அமுது படையல் நிகழ்ச்சி அம்மையார் கோவிலில் நடந்தது. இதில் இனிப்பு, பழங்கள் என பல்வேறு உணவுடன் இரவு இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், நாஜிம் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரவு புனிதவதியர் புஷப்பல்லக்கில் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
09-Jul-2025